கொள்கலன் ஒன்றுடன் மோதிய தொடருந்து - முற்றாக ஸ்தம்பித்த போக்குவரத்து(Video)
வில்வத்த ரயில் கடவையில் கொள்கலன் ஒன்று தொடருந்துடன் இன்று காலை மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக கிரிஉல்ல - மீரிகம வீதி போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அலுவலக தொடருந்துடன் இந்த கொள்கலன் மோதியுள்ளது.
பலத்த சேதம்

தொடருந்தில் மோதிய கொள்கலன் பெட்டி சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டதால் தொடருந்து சமிஞ்சை, மின்கம்பங்கள், தொடருந்து கதவுகள் என்பன பலத்த சேதம் அடைந்துள்ளதென என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தால், தொடருந்தின் சக்கரங்கள் மற்றும் என்ஜின் பலத்த சேதமடைந்துள்ளன.
இதனால் பல தொடருந்துகள் தாமதமாக புறப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam