விகாரமாதேவி பூங்காவில் FOOT Massage செய்யும் தேரர்களை விரட்ட தயார் நிலையில் பொலிஸார்
கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் பௌத்த துறவிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தொடர்பில் சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
சிறையில் உள்ள ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஞானசார தேரருக்கு சிறைச்சாலையில் காவி உடை அணிவிப்பது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், குறித்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 2027 ஜனவரி 29ஆம் திகதி நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விகாரமாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காகப் பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உத்தரவு போராட்டக்காரர்களிடம் வாசித்துக் காட்டப்பட்டு, அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும், அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், போராட்டக்காரர்கள் பூங்காவில் கூடாரங்களை அமைத்துத் தங்கியிருப்பதுடன், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஏனைய வசதிகளும் கிடைத்து வருவதாகக் கூறப்படுகிறது. தேரர்களுக்கு காலுக்கு மசாஜ் செய்து கொண்டு சுகபோகமாக வாழ்வதையும் காணக்கூடியதாகவுள்ளது.
இந்தப் போராட்டத்தின் பின்னணி, பொலிஸாரின் நடவடிக்கைகள் மற்றும் பொது இடத்தில் போராட்டம் நடத்தப்படுவது தொடர்பில் பல்வேறு கேள்விகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஞானசார தேரர் தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் கவனம் பெற்றுள்ளது.
முழுமையான தகவல்களுக்கு லங்காசிறியின் Newsinsight நிகழ்ச்சியை காண்க..