பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு
ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சி, பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்த கருத்துக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரி கறுவாத்தோட்டம் (Cinnamon Gardens) பொலிஸ் நிலையத்தில் ஒக்டோபர் 23 அன்று முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளது.
முன்னதாக, கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் பிக்குகள் நடத்திய போராட்டத்தின் போது, இரண்டு கத்திகளுடன் பிடிபட்ட நபர் ஒருவர் பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி தலைமையகத்துடன் தொடர்புடையவர் என பலங்கொட கஸ்ஸப தேரர் குற்றம் சாட்டியிருந்தார்.
போலி குற்றச்சாட்டு
எனினும், இந்தச் சந்தேகநபருக்கும் தமது பெலவத்தை அலுவலகத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என ஜே.வி.பி முற்றாக மறுத்துள்ளது.

தேரரின் இந்த அறிக்கை பொய் என்பதோடு, இது பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஜே வி பியின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அடிக்கடி கட்சியின் தலைமையகத்திற்கு வந்து செல்வதால், இந்த போலி குற்றச்சாட்டு அலுவலகத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்றும் ஜே.வி.பி கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நியாயமான விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொண்ட ஜே.வி.பி, தொடர்பான காணொளிகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளது.