மருதானையில் தடம்புரண்ட தொடருந்து என்ஜின்!
மருதானையில் இருந்து தென்னிலங்கை நோக்கிப் புறப்படவிருந்த தொடருந்து ஒன்றின் என்ஜின் ஒன்று தடம்புரண்டதன் காரணமாக மருதானை-கோட்டை வரையான தொடருந்து போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
மருதானையிலிருந்து ஹிக்கடுவ நோக்கி தினமும் மாலை 6.10 மணிக்கு புறப்படும் கடுகதி தொடருந்தின் எஞ்சின் பகுதியே இன்று (24) மாலையில் மேற்குறித்தவாறு தடம் புரண்டுள்ளது.
போக்குவரத்து தடங்கல்
மருதானை தொடருந்து நிலையத்தின் கடைக்கோடி முனையத்திலிருந்து மேடையில் நிறுத்தப்பட்டிருந்த பெட்டிகளுடன் இணைக்க எஞ்சின் நகர்த்தப்பட்டபோது, மருதானை பாலம் அருகே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது எஞ்சினின் நான்கு சக்கரங்கள் தடம் புரண்டுள்ளதுடன், விபத்தின் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் மருதானை இடையிலான தொடருந்து பாதையின் ஒரு பகுதியில் போக்குவரத்து தடங்கல் ஏற்பட்டுள்ளது.
அடுத்துவரும் 3 நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri