மட்டு.கொழும்பு இரவு கடுகதி புகையிரத சேவைகள் இரத்து (Photos)
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த உதயதேவி புகையிரதம் இன்று மாலை புணாணைக்கும் வெலிகந்தைக்குமிடையில் தடம் புரண்டுள்ளது.
இதனால் இன்று இரவு 8.15 மணிக்கு கொழும்பு நோக்கிப் புறப்படவிருந்த இரவு கடுகதி பாடும்மீன் புகையிரத சேவை மற்றும் அதிகாலை 1.15க்குப் புறப்படும் சொகுசு புகையிரத சேவை, கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று மாலை 7.00 மணிக்குப் புறப்படும் கடுகதி புகையிரத சேவை என்பன இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதம அதிபர் ஏ.பேரின்பராசா தெரிவித்துள்ளார்.
குறித்த புகையிரத பாதை சீர் செய்யப்பட்டவுடன் மீண்டும் குறித்த புகையிரத சேவை இடம்பெறுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதனால் மூன்று தூர இட புகையிரத சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.















