புதிய களனி பாலத்தில் போக்குவரத்து மட்டுப்படுத்தல்: வெளியான அறிவிப்பு
புதிய களனி பாலத்தில் இருந்து துறைமுகத்திற்கு செல்லும் பாதை திருத்த வேலை காரணமாக மூடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று (09) இரவு 9:00 மணி முதல் பெப்ரவரி 12 ஆம் திகதி அதிகாலை 5:00 மணி வரை கட்டுநாயக்கவிலிருந்து களனி பாலம் மற்றும் துறைமுகத்தை நோக்கிச் செல்லும் பாதை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒருகொடவத்த சந்தியில் இருந்து களனி பாலத்திற்குள் பிரவேசித்து துறைமுக நுழைவாயில் (இங்குருகடே சந்தியை நோக்கிய) பாலத்தின் நடுப்பகுதியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு பலகை
இதன் மூலம் அதிவேக வீதியின் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கும், ஒருகொடவத்தையிலிருந்து கட்டுநாயக்கவிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தப்பணியின் போது, ஒருகொடவத்தை - வெல்லம்பிட்டிய வீதியில் தெமட்டகொட, பேலியகொட, நீர்கொழும்பு வீதி, மீன் சந்தைக்கு அருகில், கண்டி வீதி, தோரண சந்தி ஆகிய இடங்களில் அறிவிப்பு பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
