நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம்
உத்தேசிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால், இந்த வருடத்தில் நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நிதி திவால்நிலைக்கான காரணங்களை ஆராய மின்சார சபையின் அதிகாரிகள் நாடாளுமன்ற விசேட குழுவிற்கு அழைக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது, மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா மேலும் தெரிவிக்கையில்,
மின் உற்பத்தித்திட்டங்கள்
கடந்த அரசாங்கங்கள் எடுத்த சில தீர்மானங்கள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்களின்படி மின் உற்பத்தி நிலையங்கள் இயங்காததன் விளைவுகளை மக்கள் தற்போது அனுபவிக்க நேரிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எனவே செயற்திறன் ஆற்றல் திட்டங்களை பயன்படுத்தி எதிர்கால உற்பத்தித் திட்டங்களைத் தயாரிக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |