பட்டினியால் வாடும் கொழும்பு வாசிகள் : முன்னாள் ஜனாதிபதி வெளிப்படுத்திய தகவல்
நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர், கொழும்பு நகரிலும் அவ்வாறான மக்கள் அதிகளவானோர் உள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மூன்று வேளை வேளையில் ஒரு வேளை உணவைக் கூட பெற முடியாத மக்கள் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலன்னறுவை மாவட்டத்திலும் இவ்வாறானவர்கள் உள்ளனர்.
எனவே, உணவு உற்பத்தியை அதிகரிப்பதே முதன்மையாக செய்யப்பட வேண்டும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காமல் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியாது.
இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு மோசடி, ஊழல், திருட்டு என்பன நிறுத்தப்பட வேண்டும். நாட்டின் வருமான ஏற்றத்தாழ்வு குறைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
