நானுஓயாவில் கடும்வெள்ளம்! போக்குவரத்து பாதிப்பினால் மக்கள் அவதி
நுவரெலியா பிரதேசசபை பிரிவுக்குட்பட்ட நானுஓயா பகுதியில் இன்று (12) பிற்பகல் பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் நானுஓயா நகரில் போக்குவரத்து செய்யும் பிரதான வீதி ஊடாக வெள்ள நீரினால் நிரம்பியதால் நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் போக்குவஇரத்தும் சில மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பாரிய அசௌகரியம்
மேலும் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவில் டெஸ்போட், கிரிமிட்டி, கார்லிபேக் போன்ற பிரிவுகளில் தாழ்நிலைப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் , பலரின் வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்ததால் பிரதேச மக்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக இந்தபகுதி விவசாய நிலப்பரப்புகள் முற்றாக நீரினால் நிறைந்துள்ளன எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.











டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகர்கள்... எந்த ஜோடி பாருங்க Cineulagam

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
