ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து பேருந்து மீது விழுந்த சம்பவத்தால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்புல்லபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சி பகுதியில் இன்று(2.8.) காலை சுமார் 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் கடும் காற்று காரணமாக வீதியோரத்தில் இருந்த பாரிய மரம் திடீரென முறிந்து, அவ்வழியாக பயணித்துக் கொண்டிருந்த பேருந்து மீது விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
துரித நடவடிக்கை
இந்தச் சம்பவத்தால் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்து சில மணி நேரம் முற்றாகத் தடைபட்டது.
பின்னர், பிரதேச மக்கள் துரிதமாக நடவடிக்கை எடுத்து மரக்கிளைகளை அகற்றியதைத் தொடர்ந்து ஒரு வழிப் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்பின்னர், தோட்ட நிர்வாகத்தினரும் பிரதேச மக்களும் இணைந்து மரத்தை முழுமையாக வெட்டி அகற்றியதையடுத்து, வீதிப் போக்குவரத்து மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டது.
சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், மரம் விழுந்ததில் குறித்த பஸ்ஸிற்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.




எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri