போராட்டத்துடன் தொடர்புடைய வர்த்தகர்கள் உட்பட பலர் வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம்
நாட்டில் நடைபெற்ற போராட்டங்களின் போது பல்வேறு சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடைய முக்கிய வர்த்தகர்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட நபர்கள் பல்வேறு முறைகள் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு தரப்பினரின் விசாரணைகளை அடுத்து தப்பிச் சென்ற நபர்கள்
வெளிநாடுகளுக்கு இவ்வாறு தப்பிச் சென்றுள்ளவர்கள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் தற்போது சிறப்பு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களை கைது செய்ய இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச பாதுகாப்பு அமைப்புகளின் உதவிகளை பாதுகாப்பு தரப்பினர் பெற்றுள்ளார்.
பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளதாக தூதரங்களுக்கு அலுவலகங்களுக்கு பொய்யான தகவல்களை வழங்கி இவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
ஆபிரிக்காவுக்கு தப்பிச் சென்ற வர்த்தகர்
ஜனாதிபதி மாளிகைக்குள் செல்ஃபி புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டதாக கூறப்படும் கோடிஸ்வரரான வர்த்தகர் ஆப்ரிக்காவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த பின்னரே அந்த வர்த்தகர் தப்பிச் சென்றுள்ளார்.
இதனிடையிடையே போராட்டத்துடன் தொடர்புடைய மேலும் 200 பேர் வெளிநாட்டு தூதரங்களிடம் தஞ்சம் கோரியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.
ஜனாதிபதி மாளிகைக்கு, அலரி மாளிகைக்கு ஆகியவற்றுக்குள் அனுமதியின்றி சென்றமை மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்து அழித்தமை போன்ற சம்பவங்கள் தொடர்பாக மேலும் 30 பேரை கைது செய்ய தேடுதல்களை நடத்தி வருவதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.



