கடும் விமர்சனத்துக்குள்ளான செட்டிகுளம் பிரதேச சபையின் நடவடிக்கை
அழைப்பிதழில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி வழி ரீதியாக பெயர் அச்சிடப்படாமையால் செட்டிகுளம் பிரதேசசபை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
செட்டிகுளம் பிரதேச சபையின் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் அழைப்பிதழில் பிரதி அமைச்சரின் பெயர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களில் ஆறாவது இடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிட்டுள்ள விதம்..
அத்துடன், தற்போது தமிழ் தேசிய கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இருப்பதனால் அக்கட்சியின் பங்காளி கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுர்தீனின் பெயர் முதலாவதாகவும் உப தவிசாளர் தமிழரசு கட்சி உறுப்பினர் என்பதால் முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பா.சத்தியலிங்கத்தின் பெயர் இரண்டாவதாகவும் பதியப்பட்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், பல ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கே. கே. மஸ்தான் ஆகியோர் மூன்றாவது மற்றும் ஏழாவது இடங்களிலும் பதியப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பதியப்படும் போது ஒழுங்குமுறையொன்று உள்ள நிலையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் செட்டிகுளம் பிரதேசசபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்கள் செயல்பட்டுள்ளதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.






எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
