கைவிடப்பட்டுள்ள அரச ஊழியர்கள்! சஜித்தின் அநுதாபம்
இந்த அரசுக்கு வாக்களித்த அரச ஊழியர்கள் இன்று வீதியில் விடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ரம்பேவ கிராமத்தில் மட்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருவோர் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்றையதினம்(20.09.2025) நேரில் சென்று ஆராய்ந்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மின்சார சபை மறுசீரமைக்கப்பட்டு, நவீனமயமாக்கலுக்கு உள்ளாகுவதாக இருந்தால் நல்லது. ஆனால் ஊழியர்களின் தொழில்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
பாதுகாப்புணவர்வு
ஒரு புதிய பயணத்தை ஆரம்பிக்கும் போது, மாற்றங்களைச் செய்யும் போது, இந்தத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். தொழிலாளர்களை வீதிக்கு இறக்குவதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.
அரசுகள் பலாத்காரத்தைப் பிரயோகிக்ககூடாது. மக்கள் நேயமாக நடந்துகொள்ள வேண்டும். மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஆதரவற்றவர்களுக்கும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் ஆதரவாக நிற்க வேண்டும்.
பக்க பலத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். பாதுகாப்புணவர்வைக் கொடுக்க வேண்டும். அதைவிடுத்து மக்களைத் தூரமாக்க இடமளிக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
