விரைவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள்!
இலங்கையில் இந்திய நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்றும், தம்மை விரிவாக்கம் செய்துக்கொள்ளவுள்ள இந்திய நிறுவனங்கள், இலங்கையில் அதனை மேற்கொள்ள முடியும் என்று ஐடிசி குழுமத்தின் தலைமை நிர்வாகி சஞ்சீவ் பூரி கூறியுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கு கலாசாரம் முக்கியமானதாகும். அது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிறையவே உள்ளது.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
எனவே இந்தியர்கள், இலங்கையில் தமது வர்த்தகங்களை விரிவாக்கம் செய்யும் என்றும் பூரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்தியாவும் இலங்கையும் விரைவில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் மின்னணு உட்பட்ட உற்பத்தி மிக விரைவான வேகத்தில் புத்துயிர் பெற்று வருகின்றன. எனவே இந்திய நிறுவனங்கள், புவியியல் எல்லைகளுக்கு அப்பால் செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
