டிரான் அலஸின் உயிருக்கு அச்சுறுத்தல்.. துபாயிலிருந்து வந்த அழைப்பால் குழப்பம்!
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு துபாயில் உள்ள ஒரு பாதாள உலகத் தலைவரிடமிருந்து பல கொலை மிரட்டல்கள் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொது பாதுகாப்பு அமைச்சராக டிரான் அலஸ், பதவி வகித்த காலத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற பாதாள உலகத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான உத்தரவு தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகத் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து அனைத்து பொலிஸ் சிறப்பு பிரிவுகளுக்கும் பொலிஸ் மா அதிபர் தகவல் அளித்துள்ளார், மேலும் கொலை மிரட்டல்கள் குறித்து விசாரணையைத் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தீவிரத் தன்மை
விசாரணைகளின் போது மிரட்டல் விடுத்த நபர்கள், அவர்களின் நோக்கங்கள் மற்றும் அச்சுறுத்தல்களின் தீவிரத்தை அடையாளம் காண்பதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
டிரான் அலஸ், அமைச்சராக இருந்த காலத்தில் பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்கியதற்கும், வெளிநாடுகளில் மறைந்திருக்கும் பாதாள உலகத் தலைவர்களை மீண்டும் கொண்டுவர முயன்ற சர்வதேச ஆதரவிற்கும் பதிலளிக்கும் விதமாக இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அச்சுறுத்தல்களின் தீவிரத்தன்மை மற்றும் அவற்றின் பாதுகாப்பு தாக்கங்கள் குறித்து பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், தொடர்புடைய நபர்களைக் கைது செய்து டிரான் அலஸின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



