இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்: வெளியான காரணம்
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் 22 நாட்களில் இலங்கைக்கு சுமார் 77,763 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் தினசரி சராசரி வருகை 3,534 ஆக பதிவாகியுள்ளதுடன் இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது முன்னேற்றத்தை காண்பிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை
மேலும், ஒக்டோபர் மாதத்தின் முதலாவது வாரத்தில் மொத்தம் 23,073 சுற்றுலாப்பயணிகளும், இரண்டாவது வாரத்தில் 23,434 இதே எண்ணிக்கை மூன்றாவது வாரத்தில் இன்னும் அதிகரித்து 31,265 ஆக பதிவாகியுள்ளது.
ஆனால், ஒக்டோபர் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்டிருந்த 147,789 சுற்றுலாப்பயணிகள் என்ற இலக்கில் 53 சதவீத வருகையையே இலங்கை எட்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதங்களைப் போலவே, இம்மாதமும் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 26 சதவீத பங்களிப்பை வழங்கி இந்தியா முதலிடத்தையும் 9 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தினை ரஷ்யாவும், 8 சதவீத பங்களிப்புடன் ஐக்கிய இராச்சியம் மூன்றாம் நிலையிலும் உள்ளது.
மேலும், குறித்த வரிசையில் ஜெர்மனி, சீனா, அவுஸ்திரேலியா, மாலைதீவுகள், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        