இயக்கச்சியில் பலரையும் வியக்க வைக்கும் ஒரு தமிழனின் முயற்சி!
இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளை கவரும் ஓர் தளமாக றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை மாறிவருகின்றது.
கிளிநொச்சி - இயக்கச்சியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணை பல வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
கட்டுமான பணிகள்
இந்த சுற்றுலா தளத்தில் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு தமிழ் மன்னனின் கோட்டையாக கருதி, அவர்களின் பெயரிட்டு, குறித்த மன்னர்களின் உருவப்படங்களை பொறித்து, அவர்கள் குறித்த ஒரு சிறுகுறிப்பும் எழுதப்பட்டுள்ளது.
உலகின் ஏழு அதிசயங்கள் உள்ளடங்களாக,உலக சுற்றுலா தளங்களின் மாதிரி உருவங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இதேவேளை சுமார் 200 வரையான ஊழியர்கள் பணிபுரியும் றீ(ச்)ஷா பண்ணையில் பல்வேறு ஒப்பந்த நிறுவனங்கள் உள்ளே கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் தேவை கருதி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரத்திலான உணவங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர் விளையாட்டுத்திடல்கள், நீச்சல் தடாகங்கள் என அத்தனை வசதிகளும் கொண்டுவரப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |