அலரி மாளிகையின் விலாசத்தில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்துக்கொண்டுள்ள உதயங்க வீரதுங்க - ஹர்ச டி சில்வா
உக்ரைன் நாட்டில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதில் முன்நின்று செயற்பட்டு வரும் உதயங்க வீரதுங்க, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகை கொழும்பு 3 என்ற முகவரியில் தன்னை பதிவு செய்துக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
உதயங்க வீரதுங்க, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நெருங்கிய உறவினர் என்பதுடன் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவராக கடமையாற்றியவர்.
இவரது தலையீட்டில் உக்ரைனில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வெளியில் உள்ள பல்வேறு பலர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். சுகாதார பாதுகாப்பு முறைகளை கையாளாது, மிகவும் பாதுகாப்பற்ற வகையில் இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது எனவும் ஹர்ச டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri