தற்காலிக இடைநிறுத்தப்படும் முக்கிய சேவைகள் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள் (eRL 2.0) தளத்தில் மேற்கொள்ளப்படவுள்ள முக்கியமான கட்டமைப்பு மேம்பாடு (System Cutover) காரணமாக குறித்த சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையிலான 4 நாட்களுக்கு சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.
தற்காலிகமாக இடைநிறுத்தம்
இலங்கையின் டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள் முறைமையின் ஒட்டுமொத்த செயற்பாடு, ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மத்திய, ஊவா, தென், சபரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட 8 மாகாண சபைகளின் முதன்மைச் செயலாளர்களின் உத்தியோகபூர்வ உடன்பாடு மற்றும் அனுமதியுடன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள் நான்கு நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri