அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
ஜின் கங்கை மற்றும் நீல்வல கங்கைகளின் கரையோரங்களில் உள்ள பல பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (24) அதிகாலை 2.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைகள், நாளை (25) அதிகாலை 2.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை
இதன்படி, ஜின் கங்கையை அண்மித்த , தவளம ,நாகொட, பத்தேகம ,வெலிவிட்டிய-திவிதுர பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் நிலவுகின்றது.

எனவே, குறித்த பகுதிகளில் ஆற்றின் இருமருங்கிலும் மற்றும் தாழ்நிலப்பகுதிகளிலும் வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சாரதிகளுக்கு எச்சரிக்கை
இதற்கிடையில், நீல்வல கங்கையின் படுகையில் பராமரிக்கப்படும் ஆற்று அளவீட்டுக் கருவிகளில் உள்ள நீர்மட்டங்களின் பகுப்பாய்வின் அடிப்படையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் பஸ்கொட, கொட்டபொல, பிட்டபெத்தறை, அக்குரெஸ்ஸ, அத்துரலிய, மலிம்பாடு, கம்பூர்பிட்டிய மற்றும் திஹகொட பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள நீல்வல ஆற்றின் தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அப்பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் இந்த நிலைமை குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சஹ்ரானுடைய விரல் சைகையை காட்டிய குற்றவாளிகள் : நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன...!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: ஹார்முஸ் நீரிணை திறப்புக்கு நம்பிக்கை News Lankasri