தீவிர சிகிச்சையில் சொகுசு வாழ்க்கை! கடவுச்சொற்களை நாளுக்கு நாள் மறக்கும் சுரேஸ் சலே - சிக்கவுள்ள முக்கிய ஆதாரங்கள்

CID - Sri Lanka Police Colombo Hospital High Court of Sri Lanka Suresh Salley
By Dhayani Sep 24, 2026 04:31 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தனது கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினியின் கடவுச்சொற்களை விசாரணை அதிகாரிகளுக்கு இன்னும் வழங்கவில்லை என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்து மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவு

நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் சுரேஷ் சலே தனது கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினியின் கடவுச்சொற்களை விசாரணை அதிகாரிகளுக்கு இன்னும் வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தீவிர சிகிச்சையில் சொகுசு வாழ்க்கை! கடவுச்சொற்களை நாளுக்கு நாள் மறக்கும் சுரேஸ் சலே - சிக்கவுள்ள முக்கிய ஆதாரங்கள் | Suresh Saleh Phone And Computer Passwords Check

தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து தற்போது அவர் 42ஆவது நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தடுப்புக்காவல் உத்தரவை பயன்படுத்தி அவர் சொகுசு வாழ்க்கை அனுபவிப்பதாகவும், 28ஆம் திகதிக்கு பின்னர் அவரை வைத்தியசாலையிலிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச்சென்று வழக்கமான விசாரணைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சுரேஷ் சலே அந்த கடவுச்சொற்கள் தனக்கு நினைவில் இல்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளதாகவும் மன்றில் அறிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் மடிக்கணினி தனது மகளுடையது என கூறி பின்னர் கடவுச்சொற்களை வழங்காமல் அவர் தொடர்ச்சியாக தவிர்த்து வந்த நிலையில், அதிகாரிகள் உடனடியாக மடிக்கணினியை தனது பொறுப்பில் எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியொருவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான விடயம் ஞாபக சக்தி என்றும், அவை இல்லாத நபருக்கு 40 இலட்சம் ரூபா அரச நிதியை பயன்படுத்தி அவரது இதயத்திற்கு உபகரணம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு

இதற்கு பதிலளித்த சுரேஷ் சலேவின் சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, சுரேஷ் சலே புலனாய்வு பிரிவு அதிகாரி என்பதால் அவர் 02 நாட்களுக்கு ஒரு தடவை கடவுச்சொற்களை மாற்றுவதனால் ஒரு வாரத்திற்கு முன்பிருந்த கடவுச்சொற்கள் நினைவில் இல்லை என்றும், அதேபோன்று பல மாதங்களுக்கு முன்பிருந்த கடவுச்சொற்கள் நினைவில் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தீவிர சிகிச்சையில் சொகுசு வாழ்க்கை! கடவுச்சொற்களை நாளுக்கு நாள் மறக்கும் சுரேஸ் சலே - சிக்கவுள்ள முக்கிய ஆதாரங்கள் | Suresh Saleh Phone And Computer Passwords Check

இதனையடுத்து இருதரப்பு வாதங்களை ஆராய்ந்த நீதவான் கடவுச்சொல் தொடர்பாக வேறு நடவடிக்கைகளை எடுக்குமாறும் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டதுடன், வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.   

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்

கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்

கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்


   

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US