முன்பள்ளிச் சிறுவர்கள் தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் முன்பள்ளிச் சிறுவர்களிடையே டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி, 64 சதவீதமான சிறுவர்கள் தினமும் 30 நிமிடங்களுக்கும் மேலாகக் கைத்தொலைபேசிகள் அல்லது கணினிகளைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
பெற்றோரின் அக்கறையும் பங்களிப்பும்
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய டொக்டர் அனில் ஜாசிங்க, சிறுவர்களின் திரை பயன்பாடு மற்றும் ஏனைய தினசரி பழக்கவழக்கங்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி, சிறுவர்களின் திரை பயன்பாட்டு நேரத்தை தினமும் 30 நிமிடங்களுக்கும் குறைவாக வைத்திருக்க வேண்டும். இந்த ஆய்வின் முடிவுகளைத் தொடர்ந்து, முன்பள்ளிச் சிறுவர்களுக்கான சுகாதார மேம்பாட்டுத் திட்டம் மற்றும் புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தச் சுகாதார அமைச்சு ஆயத்தமாகி வருகிறது.
சுமார் 43 சதவீதமான சிறுவர்கள் டிஜிட்டல் திரைகளைப் பார்த்துக்கொண்டே உணவருந்துகின்றனர். 32 சதவீதமான சிறுவர்கள் தினமும் 10 முதல் 11 மணித்தியாலங்களுக்கும் குறைவாகவே உறங்குகின்றனர்.சுமார் 80 சதவீதமான சிறுவர்கள் தினமும் இருமுறை பல் துலக்குகின்றனர்.
56 சதவீதமான சிறுவர்கள் பராமரிப்பாளர்கள் அல்லது பெற்றோரின் கோபத்திற்கு ஆளாகும் சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர்.
53 சதவீதமான தந்தையர்கள் மட்டுமே தங்கள் பிள்ளைகளின் பராமரிப்பில் நேரடியாகவும் தீவிரமாகவும் ஈடுபடுகின்றனர்.
சிறுவர்களின் ஆரம்பக்கால வளர்ச்சியில் பெற்றோரின் அக்கறையும் பங்களிப்பும் மேலும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுவதாக டொக்டர் அனில் ஜாசிங்க வலியுறுத்தினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: ஹார்முஸ் நீரிணை திறப்புக்கு நம்பிக்கை News Lankasri