கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
மொரட்டுவை, சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியின் 'C' பகுதியில் நேற்றிரவு (23) இடம்பெற்ற திடீர் தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தீ விபத்தில் மூன்று பேர் சிக்கிக்கொண்டதுடன், அவர்களில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவை தீயணைப்புப் பிரிவினர் 2 தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தற்போது தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்கள்
சொய்சாபுர அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் 'சி-4' பிரிவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்த்தளத்தின் இடதுபுறத்தில் அமைந்திருந்த வீட்டில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் மனைவி, கணவர் மற்றும் அவர்களது குழந்தை வசித்து வந்த நிலையில், தீ விபத்தில் காயமடைந்து கணவர் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், தீப்பிடித்த வீட்டிலிருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் வீட்டில் இவ்வளவு சிலிண்டர்கள் இருப்பது அப்பகுதி மக்களுக்கு தெரியாது என்றும் கூறப்படுகின்றது.
மேலும் தீ விபத்துக்கான சரியான காரணம் வெளியாகாத நிலையில், எரிவாயுக்கசிவின் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: ஹார்முஸ் நீரிணை திறப்புக்கு நம்பிக்கை News Lankasri