தென்னிலங்கையில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - ஒருவர் பலி - இருவர் படுகாயம்
மொரட்டுவ - சொய்சாபுர வீட்டுத் தொகுதியின் தரைத்தளத்தில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் மூவர் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மின்சார கோளாறு
படுகாயம் அடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மொரட்டுவ தீயணைப்புப் பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைக்கு அமைய மின்சார கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
YOU MAY LIKE THIS VIDEO..