வீசா நடைமுறையில் தலையிடுமாறு ரணிலிடம் கோரியுள்ள சுற்றுலாத்துறையினர்
சுற்றுலா விசா நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்தில் தலையிடுமாறு இலங்கையின் முக்கிய சுற்றுலாப் பங்குதாரர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) வலியுறுத்தியுள்ளனர்.
2024 ஏப்ரல் 17 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய ஒழுங்குமுறையின்படி, அனைத்து சுற்றுலா விசா விண்ணப்பங்களையும் ஒரு தனியார் நிறுவன இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
இது முன்னர் பயன்படுத்தப்பட்ட அரசாங்கத்தால் இயக்கப்பட்ட மின்னணு பயண அங்கீகார (ETA) அமைப்பை மாற்றுகிறது.
பிராந்திய போட்டியாளர்களுடனான ஒப்பீடு
இந்நிலையில், புதிய செயன்முறையில் சுற்றுலாப் பங்குதாரர்கள் பல சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதன்படி, மின்னணு பயண அங்கீகார அமைப்பு மூலம் முன்பு கிடைத்த ஒற்றை நுழைவு 30 நாள் விசா இனி வழங்கப்படாது.
தற்போது, ஆறு மாத பல நுழைவு விசா மட்டுமே 100.77 டொலர் கட்டணத்தில் கிடைக்கிறது. இந்த விசா கட்டணம், ஆசியாவிலேயே மிக அதிகமான கட்டணமாகும்.
இது, இலவச அல்லது மலிவான விசாக்களை வழங்கும் பிராந்திய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை தடுக்கிறது.
பயனர் நட்பு விசா
அத்துடன், புதிய இணையத்தளத்தின் விண்ணப்பச் செயல்முறை சிக்கலானது என்று தொழில்துறை பங்குதார்கள் விமர்சித்துள்ளனர்.
இதன் காரணமாக. 2024ஆம் ஆண்டில் தொழில்துறையின் 2.3 முதல் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் என்ற எதிர்ப்பார்க்கப்பட்ட இலக்கு பாதிக்கப்படலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்
எனவே, முன்னரைப் போன்றே, அரசாங்க இணையத்தளம் மூலம் பயனர் நட்பு விசா செயல்முறையை நடைமுறைப்படுத்துமாறு அவர்கள் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
