ரூபாவின் மதிப்பு வலுப்பெற்றதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை: பேராசிரியர் தகவல்
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு வலுப்பெற்றதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்துவதன் ஊடாக அனைத்து இறக்குமதிப் பொருட்களின் விலைகளையும் குறைத்து அதன் பயனை மக்களுக்கு வழங்க முடியும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இலங்கை பொருளாதாரம் பலவீனமடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இதேவேளை, உலகில் வேகமாக வளரும் நாணயங்களில் ஒன்றாக ரூபாவும் மாறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம், உலகின் ஏனைய நாணயங்களுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri