இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு: வெளிவந்துள்ள தகவல்

Sri Lanka Economy of Sri Lanka Export
By Diasa May 04, 2024 12:07 AM GMT
Report

கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (Sri Lanka Export Development Board) தெரிவித்துள்ளது.

இதன்படி, மார்ச் மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானமாக 33,710 கோடி ரூபாவை (1,138.9 அமெரிக்க டொலர்கள்) பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகை, கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானத்தோடு ஒப்பிடுகையில், நூற்றுக்கு 9.77 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் இந்த வருடத்தின் மார்ச் மாதத்தின் ஏற்றுமதி செயற்பாடுகள் பெப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில், நூற்றுக்கு 7.51 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் சபை தெரிவித்துள்ளது.

பொது வேட்பாளராகக் களமிறங்கும் ரணில்: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

பொது வேட்பாளராகக் களமிறங்கும் ரணில்: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

பொருட்களுக்கான கேள்விகள்

அதேவேளை, இவ்வருடத்தின் மார்ச் மாதத்துக்கான சேவை ஏற்றுமதியின் பெறுமதி 275.1 மில்லியன் அமெரிக்க டொலரென்றும், கடந்த வருடத்தின் இக்காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், அது நூற்றுக்கு 8.39 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் முழு வர்த்தக பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி உள்ளிட்ட முழுமையான ஏற்றுமதி வருமானம் 4.1 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு: வெளிவந்துள்ள தகவல் | Sri Lankan Export Income 2024 March

ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களான ஆடைகள், தேயிலை, இறப்பர் மற்றும் இறப்பர் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் தேங்காய், தெங்கு சார்ந்த உற்பத்திப் பொருட்களுக்கான கேள்விகள் குறைந்தும் அதிகரித்தும் காணப்பட்டுள்ளன.

இதையடுத்து, கடந்த பெப்ரவரி மாதத்தில் ஆடைகள், தேயிலை, இறப்பர், தேங்காய் மற்றும் தெங்கு உற்பத்திப் பொருட்கள் மாணிக்கக்கற்கள் இலத்திரனியல், வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்பட்ட உணவுகள், கடலுணவு, வளர்ப்பு மீன்கள், மரக்கறி, பழங்கள் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்கள் மூலமான ஏற்றுமதி வருமானமே அதிகரித்துள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.

அதிக ஏற்றுமதி வருமானம்

இலங்கையின் வர்த்தக உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதியில் ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், துருக்கி மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகள் முக்கியமாக உள்ளன.

அந்த வகையில் இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் அதிக ஏற்றுமதி வருமானம் ஐக்கிய இராஜ்ஜியம் தவிர ஐரோப்பிய நாடுகள் மூலமே கிடைத்துள்ளன.

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு: வெளிவந்துள்ள தகவல் | Sri Lankan Export Income 2024 March

அது 248,48 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கடந்த வருடத்தின் மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில், அது 4.79 வீத அதிகரிப்பு என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மூலம் 241. 5 மில்லியன் டொலர்களும், தெற்காசிய நாடுகளுக்கான ஏற்றுமதி வருமானமாக 103.52 மில்லியன் டொலர்களும் கிடைத்துள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது. 

முன்வைக்கப்படும் புகலிட கோரிக்கைகள்: கனடா எடுத்துள்ள முடிவு

முன்வைக்கப்படும் புகலிட கோரிக்கைகள்: கனடா எடுத்துள்ள முடிவு

கொத்து ப்ரைட் ரைஸ் விலைகளில் மாற்றம்

கொத்து ப்ரைட் ரைஸ் விலைகளில் மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US