கண்டியில் பொலிஸ் உயர் அதிகாரி மசாஜ் நிலையங்களை நடத்தி வருவதாக தகவல்
கண்டி பொலிஸ் உயர் அதிகாரி, கண்டியில் நடத்தி வரும் இரண்டு மிகப் பெரிய மசாஜ் நிலையங்கள் தொடர்பான தகவல்கள் பொலிஸ் வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ளன.
மசாஜ் நிலையங்களில் 15 பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார்
கண்டி ராஜசிங்க மாவத்தை மற்றும் தம்மசித்த மாவத்தை ஆகிய பிரதேசங்களில் இந்த மசாஜ் நிலையங்கள் இயங்குவதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பொலிஸ் உயர் அதிகாரி, இந்த மசாஜ் நிலையங்களில் யுவதிகள் மற்றும் பெண் என 15 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளதாக தெரியவருகிறது.
மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் கண்டி நகரம் முழுவது பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மசாஜ் நிலையங்களிலும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கண்டி பொலிஸின் கீழ் மட்ட அதிகாரிகள் ஊடகங்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்
ஐஸ் போதைப் பொருள் விற்பனையும் இதன் ஊடாக முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது எனவும் சுற்றவளைப்பு தேடுதல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களை தடுக்க குறித்த பொலிஸ் உயர் அதிகாரி இடமளிப்பதில்லை எனவும் தனக்கு சொந்தமாக இரண்டு மசாஜ் நிலையங்கள் இருப்பதே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
கண்டி அம்பிட்டியவில் மாணவன் மீது மண்ணெண்ணை ஊற்றி எரியூட்டிய குற்றச் செயலை மறைக்க கண்டி பொலிஸார் நடந்துக்கொண்ட விதம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிவாராத இந்த விடயங்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 6 மணி நேரம் முன்

என் அழகான மனைவி இறந்துவிட்டாள்! உருகிய கணவர்..பிரித்தானிய பெண்ணின் மரணத்தில் ஒரு மாதத்திற்கு பின் விலகிய மர்மம் News Lankasri

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

காலை உணவை சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா? News Lankasri
