கோட்டாவுக்குத் தக்க பாடம் புகட்ட நாளை சகலரும் அணிதிரள்வோம்: தமிழ் முற்போக்குக் கூட்டணி அழைப்பு
"நாட்டின் எதிர்காலம் கருதி நாளை 9ஆம் திகதி அனைவரும் ஓரணி சேர்வோம் எனவும் மக்களை வதைக்கும் சக்திகளுக்கு ஒற்றுமையால் தக்க பாடம் புகட்டுவோம்" என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாளை நாடெங்கும் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் தனது முகநூல் பக்கத்தில் திகாம்பரம் இவ்வாறு பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் போராட்டம்
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், அவர் தலைமையிலான அரசாங்கத்தையும் பதவியிலிருந்து அகற்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஓரணியில் திரண்டு தொடர்ந்து போராட வேண்டும்.

இந்த அரசாங்கத்திற்கு எதிராக நாடெங்கும் நாளை நடைபெறும் மக்கள் தன்னெழுச்சிப் போராட்டத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குகின்றது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam