நவீன தொழினுட்ப கண்காணிப்பில் கழிவகற்றும் பவுசர்கள்: வடக்கு மாகாண ஆளுநர்
மலக்கழிவகற்றும் பவுசர்களை ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தினூடாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மலக்கழிவுகள் உரியவாறு அப்புறப்படுத்தாமையால் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவங்களின் ஊடாக மலக்கழிவகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பவுசர்களில் நிரப்பிச் செல்லப்படும் மலக்கழிவை உரியவாறு அப்புறப்படுத்துவதில்லை எனவும் கௌரவ ஆளுநரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
சுகாதார அமைச்சில் பதிவு
ஒரு சில பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அண்மையில் இவை கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயங்களை கேட்டறிந்துக் கொண்ட ஆளுநர் பின்வரும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மலக்கழிவகற்றும் பவுசர்களை ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தினூடாக கண்காணித்தல், மலக்கழிவகற்றும் செயற்பாடுகளில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் மாகாண சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும்.
பொலிஸாரின் ஒத்துழைப்பு
இந்த செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் பவுசர்களில் நிறுவனத்தின் பெயர், பதிவு விபரங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன் இவர்களுக்கான ஒழுங்கு விதிகளை உள்ளுராட்சி நிறுவனங்கள் அறிவிக்க வேண்டும். குறித்த பவுசர்களை போக்குவரத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இந்த கூட்டத்தில் உள்ளூராட்சிமன்ற திணைக்கள ஆணையாளர், யாழ்.மாநகர சபை ஆணையாளர், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
