நாட்டின் சில மாவட்டங்களில் மதுபானசாலைகளுக்கு பூட்டு
எதிர்வரும் 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாரின் ஊடகப்பிரிவு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
உத்தியோகபூர்வ கோரிக்கை
தமிழ் மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தைப்பொங்கல் தினத்தன்று மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் உத்தியோகபூர்வ கோரிக்கையொன்னை விடுத்திருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்துக்கு இராஜாங்க அமைச்சர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், தைப்பொங்கல் தினத்தில் மதுபானசாலைகளை மூடுவதனால் மது விற்பனையையோ அல்லது மது பாவனையையோ இல்லாது செய்துவிட முடியாது.
எனினும், நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகளில் தமிழர்களே அதிகமாக தொழில் புரிகின்றனர்.
திணைக்கள ஆணையாளர்
அவர்களும் இந்த தைப்பொங்கல் தினத்தை குடும்பத்தோடு கொண்டாட வேண்டும் என்பதற்காகவும் தைத்திருநாளை புனிதமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும் மேற்படி இரண்டு மாவட்டங்களிலும் மதுபானசாலைகளை ஒரு தினத்துக்கு மூடுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேற்படி கோரிக்கை எற்றுக்கொண்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடிதத்தின் பிரதிகள் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்ட செயலாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
