நாட்டில் பல இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்: வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு இலங்கைக்கு கிழக்கே இன்னும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீவு முழுவதும் மேகமூட்டமான வானிலை எதிர்பார்க்கப்படலாம் என்றும் மற்றும் மத்திய மலைப்பாங்கான பகுதியில், குறிப்பாக காலை நேரத்தில் பனிமூட்டமான நிலை நிலவும் என்றும், தீவின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஏனைய இடங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடல் பிரதேசங்களை பொருத்தவரை தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கையின் கிழக்கே இன்னும் நீடிக்கிறது.
இது தொடர்பில் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழை எதிர்பார்க்கலாம்.
பொத்துவிலிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்று வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வீசும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்று வடமேற்கு திசையில் வீசும் என்றும் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
