இன்றைய நாணய மாற்று விகிதம்! டொலரின் பெறுமதி தொடர்ந்து உயர்கிறது
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று சிறிதளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 33 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 70 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதி சற்று ஏற்ற, இறக்கம் கண்டுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 377.21 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 361.89 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 445.91ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 428.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
குவைத் தினார் மற்றும் கட்டார் ரியால்
குவைத் தினாரின் பெறுமதியானது 1176.03 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 98.58 ரூபாவாக காணப்படுகிறது.
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri