மூன்று மாதங்களுக்கு மின் துண்டிப்பா? இன்று முக்கிய தீர்மானம்
நாட்டின் தற்போதைய நிலையில் 3 மாதங்களுக்கு மின்சார துண்டிப்பு அவசியம் என இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கு மின்சார துண்டிப்பு அவசியம் என இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பிலே கலந்துரையாடப்படவுள்ளது.
மின்சார துண்டிப்புக்கான அனுமதியை வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின்சாரத்தை தடையின்றி விநியோகிக்க வேண்டுமாயின், பொதுமக்களும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் இந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 7 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam