இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (23) குறைவடைந்துள்ளது.
இந்தநிலையில், இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,012,746 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய நிலவரம்
இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,730 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 285,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,760 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 262,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,270 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 250,150 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.
செட்டியார் தெரு தங்க விலை
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 269,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 247,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
