வேகமாக உயர்ந்த டொலர் விலையில் இன்று மாற்றம்..!
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக எகிறிக் கொண்டிருந்த அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்றைய தினம்(22.05.2026) சிறியதொரு தேக்கநிலை ஏற்பட்டு பெறுமதி மிகச் சிறியளவில் குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியால் இன்று(22) வெளியிடப்பட்ட நாளாந்த நாணய மாற்று விகித தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் வாங்கும் விலை 342.67 ரூபாவாகவும், விற்பனை விலை 353.17 ரூபாவாகவும், பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 02ஆம் திகதி முதல் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் நேற்று (21.05.2026) பதிவாகியிருந்தன.
டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள தாக்கம்! வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
அதன் பிரகாரம் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342.63 ரூபா மற்றும் விற்பனை பெறுமதி 354.03 ரூபா ஆக பதிவாகியுள்ளன.
வங்கிகளில் பதிவான பெறுமதி
இருப்பினும் இன்று, நாட்டில் உள்ள அனுமிபெற்ற வர்த்தக வங்கிகளின் நாளாந்த நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதியில் ஒரு சிறிய சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை (22) நாட்டில் உள்ள பல அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகள் ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்கும் பெறுமதிகள் கீழ்வருமாறு,
- இலங்கை வங்கி ரூ. 340.75 - ரூ. 349.75
- மக்கள் வங்கி - ரூ. 343.95 - ரூ. 354.24
- சம்பத் வங்கி - ரூ. 343.50 - ரூ. 352.50
- கொமர்ஷியல் வங்கி - ரூ. 343.09 - ரூ. 354.25
- HNB - ரூ. 344.50 - ரூ. 353.00
- செலான் வங்கி - ரூ. 342.75 - ரூ. 354.7
அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வெளியேறுங்கள் - பல மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை