புத்தாண்டில் நற்பலன்கள் கிடைக்க வேண்டுமா! செய்ய வேண்டிய முக்கிய வழிபாடுகள்
சுக்ல பட்சத்தில் சஷ்டி திதி, மிருகசீரிஷம் 4 ஆம் பாதத்தில் மிதுன ராசியில், விருச்சிக லக்னத்திலும், நவாம்சத்தில் கடக லக்னம், துலா ராசியிலும் சோபனம் நாமயோகம், கவுலவம் நாமகரணத்தில் சனி ஹோரையிலும், செவ்வாய் மகா தசையில் சுக்கிர புத்தி, புதன் அந்தரத்தில் இந்த தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டில் தமது தொழிலை ஆரம்பித்தல் மற்றும் உணவு சமைத்து உண்பதற்கான நேரம் இன்று (14) அதிகாலை 12.06 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.
எள், கரும்பு, வெல்லம் கலந்த பால் சாதம் தயாரித்து, நீல நிற ஆடை அணிந்து, தெற்குத் திசையை நோக்கி, அனைத்து வேலைகளையும் செய்து, உணவு உண்ண வேண்டும். இவ்வாறு வழிபாடுகள் செய்யும் போது புத்தாண்டில் நற்பலன்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புண்ணிய காலங்கள்
அதேநேரம் வாக்கிய பஞ்சாகத்தின் படி நேற்றைய தினம் மாலை 4.15 முதல் நள்ளிரவு 12.15 வரையிலான காலம் விஷு புண்ணிய காலமாகும்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நேற்று மாலை 5.04 முதல் நள்ளிரவு 1.04 வரை விஷு புண்ணிய காலமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விஷு புண்ணிய காலத்தில் மருத்து நீர் வைத்து தலையில் ஆலிலையும் காலில் இலவம் இலையும் வைத்து ஸ்நானம் செய்வது மிகவும் சிறப்பானதாகும்.