தொழில் வல்லுநர்கள் தேசிய முன்னணி ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை
சர்வதேச சமூகத்துடன் ஆரோக்கியமான உறவுகளை பேணி பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்து, மக்களின் போராட்டத்திற்கு
முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்கவிடம் தொழில் வல்லுநர்கள் தேசிய முன்னணி
வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இது தொடர்பான கோரிக்கைகளை அந்த அமைப்பு முன்வைத்துள்ளது.
இதன்படி, ஊழல் அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்ட பொது சொத்துக்கள் நாட்டுக்கு திரும்பக் கிடைத்தால் இந்த நெருக்கடிக்கு காரணமானவர்களை பொறுப்புக்கூற வைக்ககோரும் மக்கள் போராட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முடியும்.
மக்களின் போராட்டத்தை தணிக்கும் வழிமுறை

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு முடிவுகட்ட நீண்டகால பொருளாதார திட்டம் முன்வைக்கப்பட்டால் மக்களின் போராட்டத்தை தணிக்க முடியும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடக்குமுறை நடவடிக்கைகள் மூலம் மக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பது பிரச்சினைகள் எழும் என தொழில் வல்லுநர்கள் தேசிய முன்னணி ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய தயாராகி வரும் போராட்டகாரர்கள் |