கைதான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களுக்கு பிணை!
பொலிஸாரால் இன்று (15.06.2023) கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மூவரும் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைதான மூவரும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில்
முற்படுத்தப்பட்டிருந்த நிலையில் பிணையில் செல்ல
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மூவர் இன்று (15.06.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகர், மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன் ஆகியோரே கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். - வடமராட்சி கிழக்கு, மருதங்கேணிப் பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற முரண்பாடு தொடர்பில் இன்று விசாரணைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
வாக்குமூலம் பெற்ற பின்னர் கைது
இந்நிலையில் மூவரிடமும் வாக்குமூலம் பெற்ற பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam