தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்டத்திற்கான பிரதான கட்சி அலுவலகம் திறந்துவைப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்கான தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்டத்திற்கான பிரதான கட்சி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் நேற்றைய தினம்(17) தமிழரசு கட்சி வேட்பாளர் சட்டத்தரணி செல்வராஜ் டினேஸனால் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முகமாகவும் கட்சி சார்ந்த தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவும் மேற்படி காரியாலயம் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இளைஞர்களுக்கான கூட்டம்
அதே நேரம் தமிழரசு கட்சியின் இளைஞர்களுக்கான கூட்டமும் மன்னார் தனியார் விடுதியில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவன்பிட்டி,வட்டகண்டல்,வெள்ளிமலை,சாந்திபுரம்,தலைமன்னார்,பேசாலை,முருங்கள் உள்ளடங்களாக பல கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் குறித்த ஒன்றுகூடலுக்கு வருகை தந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வைத்தியருமான சிவமோகன் அவர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு இவ் வருடம் தேர்தலுக்கான ஆதரவை சட்டத்தரணி செல்வராஜ டினேஸனுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
