புதுக்குடியிருப்பில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கை
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார வைத்திய பணிமனையின் ஏற்பாட்டில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும், துப்பரவு பணிகள் நகர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கை நேற்று(17.10.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பரவு நடவடிக்கையில், சுகாதார வைத்திய அதிகாரி பி.சத்தியரூபன், புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினருடன் இணைந்து நகரை அண்மித்துள்ள பகுதிகளில் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
டெங்கு பரிசோதனை
டெங்கு பரிசோதனை நடவடிக்கையின்போது டெங்கு நோய் பரவும் சாத்தியமாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளுற்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் துப்பரவு செய்யப்படாத காணிகள், வெற்று காணிகள், கடைகளின் உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்படுள்ளது.
குறித்த நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய தொற்றுநோய் வைத்திய
அதிகாரி வி.விஜிதரன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், புதுக்குடியிருப்பு
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழுள்ள சமுர்த்தி பயனாளர்கள், சிவில்
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், புதுக்குடியிருப்பு பொலிஸார், ஆடைதொழிற்சாலை
ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு துப்பரவு பணியினை மேற்கொண்டிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri