டக்ளஸின் இணைப்பாளருக்கு வழங்கப்பட்ட அரச விடுதி: அம்பலமான தகவல்

Kilinochchi Douglas Devananda Sri Lankan political crisis
By Rakesh Oct 18, 2024 07:02 AM GMT
Report

கிளிநொச்சி மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் இணைப்பாளருக்குப் பயன்பாட்டுக்கு என்னும் பெயரில் அரச செயலகத்தின் விடுதி இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபருக்கு வழங்கப்பட வேண்டிய விடுதியே இப்படி அரசியல்வாதியான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் தனிப்பட்ட அலுவலரான அவரது இணைப்பாளருக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செயற்பட்டு வந்தார்.

இலங்கை கடலை மாசுப்படுத்திய 26 கப்பல்கள் குறித்து வெளியான தகவல்

இலங்கை கடலை மாசுப்படுத்திய 26 கப்பல்கள் குறித்து வெளியான தகவல்

டக்ளஸ் தேவானந்தா

டக்ளஸ் தேவானந்தாவின் காலத்திலேயே இந்த விடுதி இப்படிப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்புக் குழுவின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலக சுற்றுநிரூபத்தில் தெளிவாக விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

டக்ளஸின் இணைப்பாளருக்கு வழங்கப்பட்ட அரச விடுதி: அம்பலமான தகவல் | Allegation Regarding Govt Hostel Facility

அதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இப்படி ஒரு தனிப்பட்ட அலுவலருக்கு அரச விடுதி வசதி வழங்குவது குறித்துக் குறிப்பிடப்படாதபோதும் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் இந்த விடுதி வசதி சட்டமுரணாக வழங்கப்பட்டுள்ளது.

சட்டமுரணாக இந்த விடுயைக் கிளிநொச்சி மாவட்டத்தின் அப்போதைய அரச அதிபரான ரூபவதி கேதீஸ்வரன் வழங்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது.

இந்த விடுதியில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உதவியாளரே தங்கியிருந்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக மாவட்ட செயலகத்தின் விடுதியில் தங்கியிருந்தமை மட்டுமன்றி அதற்கான வாடகைக் கொடுப்பனவு, மின்சாரக் கட்டணம் எவையும் அவரால் செலுத்தப்படவும் இல்லை.

யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக இளம் குடும்ப பெண் உயிரிழப்பு

யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக இளம் குடும்ப பெண் உயிரிழப்பு

இரண்டு ஆண்டு கால மின்சாரக் கட்டணம்

வாடகையோ அல்லது மின்சாரக் கட்டணமோ செலுத்தாமல் தங்கியிருந்த விடுதியின் இரண்டு ஆண்டு கால மின்சாரக் கட்டணம் மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பு அலுவலக செலவில் இருந்து கட்டப்பட்டுள்ளது என்று மாவட்ட செயலகம் எழுத்து மூலம் வழங்கிய தகவல் அறியும் சட்டத்தின் கீழான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டக்ளஸின் இணைப்பாளருக்கு வழங்கப்பட்ட அரச விடுதி: அம்பலமான தகவல் | Allegation Regarding Govt Hostel Facility

மாவட்டச் செயலகத்தின் அரச விடுதியை சம்பந்தப்பட்டவருக்கு வழங்க இணக்கம் தெரிவித்து 2020.11.10 அன்று அப்போதைய மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் இணைப்பாளருக்கு வழங்கப்பட்டக் கடிதத்தில் விடுதிக்கான மின்சாரக் கட்டணத்தைத் தங்களால் நேரடியாகச் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020.11.10 ஆம் திகதிய இவ்வாறு மாவட்ட அரச அதிபர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளருக்கு விடுதியை வழங்குவதற்கான இணக்கக் கடிதத்தில் குறிப்பிட்டவாறான மின்சாரக் கட்டணம் அந்தக் கடித ஏற்பாட்டுக்கு மாறாக ஒருங்கிணைப்பு அலுவலக செலவில் இருந்து செலுத்தப்பட்ட காலத்திலும் அதே அரச அதிபரே பணியில் இருந்துள்ளார்.

இவற்றின் மூலம் இந்த விடுதிக்கான பொருளாதார வாடகை கணிப்பு மற்றும் மின்சாரக் கட்டணம் ஆகியவற்றுக்கு அரச பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தலைமறைவாகியுள்ள ஜோன்ஸ்டனின் வாகனம் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை

தலைமறைவாகியுள்ள ஜோன்ஸ்டனின் வாகனம் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US