சாந்தனின் பூதவுடலுக்கு இறுதி வணக்கம் செலுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிபந்தனை
சாந்தனின் பூத உடலை இறுதி வணக்கம் செலுத்த எங்கும் வைக்காமல் மருத்துவமனையிலிருந்து நேராக விமான நிலையம் எடுத்து செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்துள்ளது.
எனவே, அவருக்கு இறுதி வணக்கம் செலுத்த விரும்புவோர் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட உடல் நலக் குறைவால் சாந்தன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வலுப்பெற்ற கோரிக்கை
இந்நிலையில், அவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றதுடன், அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டும் இருந்தது.

அதன் பின்னர், அவர் நாட்டுக்கு திரும்பும் தருணத்தில் உடல் நிலை மோசமடைந்து சென்னையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam