சாந்தனை உயிருடன் இலங்கைக்கு அனுப்பாமைக்கு காரணமாகும் பெரும் இரகசியங்கள்
சாந்தனை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த நேரத்திலாவது மனிதாபிமான அடிப்படையில் அவர் உடனடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீத பொன்கலன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், சாந்தன் இலங்கைக்கு வருவது என்பது சுதந்திரமான மனிதராக நடமாடுவதற்கு உரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நிச்சயமாக சொல்ல முடியாது.
இலங்கையில் வந்து இறங்கும்போது தான் தெரியும், இலங்கை அரசாங்கம் சாந்தனுக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்பது எமக்குத் தெரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புலம்பெயர்ந்த தமிழரின் அவதானம் எல்லாம் உயர்ந்த மட்டத்திலே உள்ளது. அரசியல் மட்டத்தில், ஜனாதிபதி மட்டத்தில், பிரதமர் மட்டத்திலே அவர்களின் அக்கறை இருந்ததே தவிர மிக கீழ்மட்டத்திலான பிரச்சினைகளுக்கு எந்த ஒரு விடயத்திலும் அக்கறை இருந்ததாக நான் நினைக்கவில்லை.
குறிப்பாக இந்த விடயம் பற்றி புலம்பெயர்ந்த தமிழர்களிடம் பெரிய ஒரு அழுத்தம் ஏற்பட்டதாக நியாபகம் இல்லை.
அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டப்பிறகு அவர்களை வெளியில் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களிடையே அக்கறை இல்லை என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |