டிரான் அலசின் முடிவை எதிர்க்கும் சட்டத்தரணிகள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் டிரான் அலஸ், நீதித்துறையின் ஒருமைப்பாட்டையும் குறைமதிப்புக்கு உட்படுத்தும் வகையில் பயன்படுத்தியுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
குற்றச்சாட்டைப் பொருட்படுத்தாமல், சந்தேக நபர்களைப் பாதுகாப்பது, சட்டப்பிரிவு 13இல் பொதிந்துள்ள, உரிய நடைமுறைக்கு உத்தரவாதம் அளிக்கும் அடிப்படை அரசியலமைப்பு உரிமை என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது அவரை பதில் காவல்துறை மா அதிபர் பதவிக்கு நியமித்தமையை சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்திருந்தது.
பதிலளித்திருந்த டிரான்
இதற்கு பதிலளித்திருந்த அமைச்சர் டிரான் அலஸ்,
“தென்னகோன், போதைவஸ்த்து கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்தநிலையில் குறித்த போதைவஸ்து கடத்தல்காரர்களுக்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகளே தென்னகோனுக்கு எதிராக கருத்துக்களை கூறுவதாக தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்த கருத்து தொடர்பிலேயே மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம், தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
வெறுக்கத்தக்க செயல்
அமைச்சரின் அறிக்கை நியாயமற்ற முறையில் சட்டத்தரணிகளை குறிவைப்பதாக சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட பொலிஸ் திணைக்களத்தில் உள்ள முறையான பிரச்சினைகளை கவனிக்காமல், சட்டத்தரணிகளை விமர்சிப்பது வெறுக்கத்தக்க செயலாகும்.” என்றார்.
அத்துடன் ஒட்டுமொத்த சட்ட அமைப்பின் ஒருமைப்பாட்டையும் இது குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
