ஹமாஸின் தாக்குதல் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிரானதே: நெதன்யாகு எடுத்துரைப்பு
ஹமாஸ் அமைப்பு மேற்கொள்ளும் போரானது, இஸ்ரேலுக்கு மட்டுமல்லாது அமெரிக்காவிற்கும் எதிரான போர் என இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு கருத்து தெரிவித்த்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பு, கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் எல்லைக்குள் நுளைந்து தாக்குதலில் ஈடுபட்டது.
பெண்கள், முதியவர்கள் என பலரையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியது. 200ற்க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது.
அவர்களை மீட்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் அரசு கூறியது.
அமெரிக்க ஆதரவு
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லோய்டு ஆஸ்டினுடன் இணைந்து கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருந்தார்.
இதன்போது, இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதற்காக தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
தொடர்ந்து அவர் கூறும்போது,
ஹமாஸிற்கு எதிரான நாகரீகத்தின் போரை நாங்கள் நடத்தி கொண்டிருக்கிறோம்.
இஸ்ரேலின் ஈடுபாடு
நாங்கள் எப்போது பேசுகிறோமோ அப்போது, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த வெற்றியை பெற வேண்டும் என்ற எங்களுடைய ஈடுபாட்டை, இஸ்ரேலின் உள்ளார்ந்த ஈடுபாட்டை, நான் மீண்டும் வெளிப்படுத்துகிறேன்.
இது எங்களுடைய போர் மட்டுமின்றி, பல வழிகளில் உங்களுடைய போரும் கூட என நாங்கள் நினைக்கிறோம்.
காரணம் உலகில் நாகரீகத்தின் சக்தியை நீங்கள் வழிநடத்தி செல்கிறீர்கள்.
ஈரானின் நிலைப்பாடுக்கு எதிரான போர் இது.
பாப் எல்-மாண்டிப் கடல்வழி ஜலசந்தியை மூடும்படி மிரட்டும் ஈரான், உலக நாடுகளின் இயக்கம் சார்ந்த சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
