இளம் குடும்பஸ்தர் மீது தாக்குதல் : பொலிஸார் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமுழமுனை கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 36 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் இரவு வேளை வீதியால் நடந்து சென்றபோது அதே கிராமத்தினை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரால் காரில் கம்பிகளுடன் வந்து தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நடவடிக்கை எடுக்காத பொலிஸார்
இந்நிலையில் வலது கை மற்றும் வலது காலில் உடைவு ஏற்பட்ட நிலையில் குறித்த குடும்பஸ்தர், மாஞ்சோலை
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று (20.12.2023) மேலதிக சிகிச்சைக்காக யாழ்
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபர் மதுபோதையில் வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய சென்ற போது, முறைப்பாட்டினை வைத்தியசாலையிலுள்ள பொலிஸார் மேற்கொள்ளுவதோடு அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறியிருந்தனர்.
இருப்பினும், பொலிஸாரினால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்டவரின் சகோதரன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தீம் பார்க் சென்ற ஜோடி: உயிரை பலிவாங்கிய ரோலர் கோஸ்டர் சவாரி News Lankasri

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
