காசா மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஒரே நாளில் 100 பேர் பலி
காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் ஒரே நாளில் சுமார் 100 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா தெரிவித்துள்ளார்.
குறித்த வான்வழி தாக்குதலானது நேற்று(19.12.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், காசாவில் நிவாணர பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கானோர் பலி
இந்நிலையில் இது குறித்து ஐ.நா. குழந்தைகள் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரசல் கூறும்போது, "தெற்கு காசாவுக்கு இடம் பெயர்ந்த குழந்தைகள், அடிப்படை தேவையான தண்ணீர் கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
பாதுகாப்பான தண்ணீர் இல்லாமல் வரும் நாட்களில் பல குழந்தைகள் இறக்க நேரிடும்" என கூறியுள்ளார்.
இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் இரண்டரை மாதங்களுக்கு மேல் நீடித்துள்ள நிலையில் குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத தடைச் சட்ட கைது விவகாரம்: ஆச்சரியம் அடைந்த ஜனாதிபதி- சாணக்கியன் வெளிப்படுத்திய தகவல் (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |