அமைச்சர் டிரான் அலஸிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை..!
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் என தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் இடம்பெற்று வரும் படுகொலை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்பட உள்ளதாகவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை புலனாய்வுத்துறையை முறியடித்த மற்றுமொரு புலனாய்வுத்துறை! நீதிபதி சரவணராஜா வெளியேறியதில் நடந்தது என்ன..(Video)
அதிகரிக்கும் படுகொலை சம்பவம்
ஒரு மாத காலத்திற்குள் நாட்டில் இடம் பெற்று வரும் படுகொலை சம்பவங்களை கட்டுப்படுத்த தவறினால், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர நேரிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவெல அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இதுவரையில் இந்த படுகொலை சம்பவங்களுக்கு தீர்வு வழங்கப்படாத காரணத்தினால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த செய்தி தொடர்பில் ஆளும் அல்லது எதிர்க்கட்சித் தரப்புக்கள் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.