டிரான் அலசிற்கு கடல்கடந்த சொத்துக்கள்: அம்பலப்படுத்திய சர்வதேச பத்திரிகையாளர்களின் புலனாய்வு கூட்டமைப்பு
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிற்கு கடல்கடந்த சொத்துக்கள் இருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர்களின் புலனாய்வு கூட்டமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கசிந்த ஆவணங்கள் மற்றும் பிரிட்டனின் ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஐசிஐஜே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஐசிஐஜே தகவல்
லண்டனில் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் புரொம்டன் புரொபெர்ட்டிஸ் நிறுவனத்திற்கு தொடர்மாடியொன்று உள்ளதாகவும் 2006 இல் 960,000 டொலர்களிற்கு இந்த சொத்தினை அவர் கொள்வனவு செய்தார் எனவும் ஐசிஐஜே தகவல் வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் பன்காம் வென்ஞசர்ஸ் நிறுவனத்திற்கு 2008 முதல் லண்டனின் செல்சியாவிற்கு அருகில் சொத்தொன்று உள்ளதாகவும் ஐசிஐஜே தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
